முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொதுக்குழுவில் எம்ஜிஆரையே எதிர்த்த அதிமுகவினர்

பொதுக்குழுவில் எம்ஜிஆரையே எதிர்த்த அதிமுகவினர்

admk

admk

1976 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் ஆதரவு தெரிவித்தவர்களையும் பேச எம்ஜிஆர் அனுமதித்தார்.

  • Last Updated :

அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு இரு தரப்புக்கிடையே மோதல் நிலவி வரும் சூழலில் இதற்கு முன்பு பொதுக்குழுவில் எம்ஜிஆரை-யே அதிமுக-வினர் எதிர்த்த வரலாறு உண்டு. அதை தற்போது பார்க்கலாம்,

திமுக-வில் இருந்து 1972-ல் வெளியேறி இடைத்தேர்தலில் வென்று சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக களமாட தயாராகிக்  கொண்டிருந்தார் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர். முதல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் மாற்றம் செய்ய எம்ஜிஆர் விரும்பினார்.

அதற்கு எம்ஜிஆரின் கட்சியிலேயே இருந்த சில தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்ஜிஆர் தொடங்கிய கட்சியில் இருந்தபடியே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுள், அப்போதைய முன்னாள் எம்எல்ஏ விஸ்வநாதனும் ஒருவர். அவர் தற்போது வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்.

மற்றொருவர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளராக விளங்கிய கோவை செழியன்.எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் போன்றோரை வைத்து படங்களை தயாரித்தவர். எம்ஜிஆரால் முதலாளி என அன்பாக அழைக்கப்பட்டவர். மூன்றாமவர், 1967 தேர்தல் காமராஜரை தோற்கடித்து நாட்டையே திரும்பிப் பார்க்க செய்த அப்போதைய முன்னாள் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பி. சீனிவாசன்.

இதையும் படிங்க: ஒற்றை தலைமை : மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல் நீதிமன்ற வழக்குவரை.. கடந்து வந்த பாதை

கட்சியின் பெயரில் மட்டும் இல்லாமல் நடைமுறையிலும் தேசிய அளவில் இயங்கினால்தான், அனைத்திந்திய என்ற பெயரை சேர்க்க வேண்டும் எனக் கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதுமட்டுமின்றி எம்ஜிஆரின் அரசியல் ஆசானான மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரையின் உருவத்தை தொண்டர்கள் பச்சைக் குத்திக் கொள்ளவேண்டும் என் எம்ஜிஆர் உத்தரவிட்டதற்கும் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எதி்ர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே 1976 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் ஆதரவு தெரிவித்தவர்களையும் பேச எம்ஜிஆர் அனுமதித்தார்.

மேலும் படிக்க: AIADMK - EPS vs OPS: பரப்புரை வாகனத்தில் புறப்பட்ட ஓபிஎஸ்!

அதை எதிர்த்து பேசிய விஸ்வநாதன், கோவை செழியன் மற்றும் சீனிவாசன் ஆகியோர்  கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும் அவர்கள் மீண்டும் பின்னாளில் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். விஸ்வநாதன், ஜெயலிலதாவின் முதல் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சர் பதவி வகித்தார்.

First published:

Tags: ADMK, MGR, OPS - EPS