சின்னங்கள் ஒதுக்கீடு விவகாரம்... தேர்தல் அதிகாரியை தாக்கிய அதிமுகவினர்...! - வீடியோ

சின்னங்கள் ஒதுக்கீடு விவகாரம்... தேர்தல் அதிகாரியை தாக்கிய அதிமுகவினர்...! - வீடியோ
தேர்தல் அதிகாரியை தாக்கும் அதிமுகவினர்
  • News18
  • Last Updated: December 20, 2019, 12:11 PM IST
  • Share this:
கடலூரில் சின்னங்கள் ஒதுக்கியதில் பாகுபாடு காட்டியதாக தேர்தல் அதிகாரியை அதிமுகவினர் நள்ளிரவில் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி முடிவடைந்தது.

மாவட்டம் முழுவதிலும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு என மொத்தம் 20,520 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.


வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி நடந்தது. 20,370 மனுக்கள் ஏற்கப்பட்டன. 150 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 19-ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அதன்படி கடலூர் ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று ஒரு சிலர் வந்து தங்களது மனுக்களை வாபஸ் பெற்று சென்றனர்.

மேலும் நேற்று மாலை சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியும் நடைபெற்றது. இந்நிலையில் மாலை 5 மணி அளவில் கடலூர் கோண்டூர் மற்றும் திருமாணிக்குழி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது அவர்களிடம் குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னம் ஒதுக்கியதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்து தருமாறு கூறினர். உடனே தேர்தல் நடத்தும் அலுவலர், அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கீடு செய்து அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளார்.இதுபற்றி அறிந்த அ.தி.மு.க.வினர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் 200-க்கு மேற்பபட்டோர் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தை சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான கால அவகாசம் முடிந்த பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்தது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஒரு கட்டத்தில் தேர்தல் அதிகாரியான அருள் அரசனை அதிமுகவினர் தள்ளிவிட்டு தாக்கினர் இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்நது அதிமுக வினர் விசிகவுக்கு கொடுத்த திமுக சின்னத்தை திரும்பபெற வலியுறுத்தி  அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த புதுநகர் போலீசார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அ.தி.மு.க.வினர் தேர்தல் நடத்தும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், சின்னம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக மேல் அதிகாரிக்கு விளக்க கடிதம் அனுப்புவதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

Also see...
First published: December 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading