அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி பழனிசாமி இல்லாமல் அ
திமுக செயற்குழு பொதுக்குழு தீர்மானம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில்
சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
சட்டப்பேரவை தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல் தோல்வி என அதிமுக தற்போது பலவீனமடைந்து காணப்படுகிறது. கட்சிக்கு ஒற்றை தலைமை இல்லாததே இந்த பின்னடைவுக்கு காரணம் என்றும் ஒற்றை தலைமை என்பது காலத்தில் தேவை என்றும் அதிமுக தொண்டர்களில் ஒருசிலர் கூறி வருகின்றனர். எனினும், ஒற்றை தலைமை என்பது தேவையில்லாதது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை புரிந்தார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைத்தியலிங்கம் திண்டுக்கல் சீனிவாசன் போன்றோரும் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
மேலும் படிக்க: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக செயற்குழு பொதுக்குழு தீர்மானம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. தீர்மானம் தொடர்பான இறுதி முடிவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ஓ.பி.எஸ். தனது காரில் புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக எம்ஜிஆர் மாளிகை பரபரப்பாக காணப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.