அமைச்சர் சொன்னவுடன் சட்டையை கழட்டி சாக்கடையில் இறங்கிய அதிமுக நிர்வாகி!

எனது வீட்டில் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வேனோ அதையே செய்தேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் அதிமுக நிர்வாகி

அமைச்சர் சொன்னவுடன் சட்டையை கழட்டி சாக்கடையில் இறங்கிய அதிமுக நிர்வாகி!
சாக்கடையில் இறங்கும் அதிமுக நிர்வாகி
  • Share this:
நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வேளாங்கண்ணி செபஸ்தியார் நகர், சுனாமி குடியிருப்பு, நாகூர் வள்ளியம்மை நகர், நாகூர் பீரோடும் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் குளம்போல தேங்கி காணப்படுகிறது.

இந்நிலையில் மழையினால் பாதிக்கப்பட்ட வேளாங்கண்ணி செபஸ்தியார் நகர் பகுதியில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு, மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்தும் சாக்கடை கழிவுகளின் அடைப்பு காரணமாக அந்த பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடியாமல் குளம் போல தேங்கி காணப்பட்டது.




கட்டளையிட்ட அமைச்சர் ; சட்டையை கழட்டிய நிர்வாகி

அதனை தொடர்ந்து மோட்டார் பம்புசெட்டை நிறுத்த சொன்ன அமைச்சர் ஓஎஸ்.மணியன், பேரூராட்சி ஊழியர்களை அழைத்தார், ஆனால், அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாத காரணத்தால், அவரே களத்தில் இறங்க முடிவு செய்தார். அப்போது அங்கிருந்த கீழையூர் ஒன்றிய செயலாளர் வேதையனை அழைத்த அமைச்சர் ஓஎஸ்.மணியன், தம்பி உள்ளே டவுசர் போட்டு இருக்கியா? என்று கேட்டு களத்தில் இறங்கு என்றார். சிரித்துகொண்டே போட்டு இருக்கேன் அண்ணே என்று கூறிய, கீழையூர் ஒன்றிய செயலாளர் வேதையன், சட்டென்று வேட்டி சட்டையை கழட்டி வைத்து விட்டு கழிவுநீர் வாய்க்காலில் இறங்கினார்.



Loading...

10 நிமிடத்தில் சீரமைப்பு பணி

பின்னர் வாய்க்காலில் இறங்கிய அவர், அங்கிருந்த மற்றவர்களின் உதவியோடு, நீர் வெளியேறாமல் தடுத்து கொண்டு இருந்த கழிவுகளை அப்புறபடுத்தினார். அருகில் இருந்துகொண்டு அமைச்சர் ஐடியா கொடுக்கவே, பக்கத்தில் இருந்த மூங்கில் கம்புகளால், தடுப்புகள் அமைத்து, வலைகளை கொண்டு கழிவுகளை வடிகட்டி நீர் மட்டும் வெளியேறுகிற வகையில் கயிர் கொண்டு கட்டினர். பின்னர் 10 நிமிடத்தல் அந்த பகுதி முழுவதும் தேங்கி இருந்த மழைநீர் அதிவேக மோட்டார் பம்பு மூலம் வெளியேற தொடங்கியது.



நன்றி கூறிய மக்கள்

3 நாட்களாக யாரும் வராத நிலையில் அமைச்சர் வந்தவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட காத்திருந்த செபஸ்தியார் நகர் பகுதி மக்கள், தங்கள் பகுதி பிரச்சனை முடிந்ததால், அமைச்சருக்கும் சாக்கடையில் இறங்கிய அதிமுக நிர்வாகிக்கும் நன்றி தெரிவித்தனர். அரசியல் நிர்வாகிகள் என்றாலே வெள்ளை வேட்டியை கட்டிக்கொண்டு, பாதிப்புகள் நிறைந்த பகுதிகளில் போஸ் கொடுத்துவிட்டு, நிவாரண பொருட்களை கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள், அதில் எனக்கு விருப்பம் இல்லை, எனது வீட்டில் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வேனோ அதையே செய்தேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் அதிமுக நிர்வாகி வேதையன்.

சாக்கடையில் இறங்கும் அதிமுக நிர்வாகி


First published: December 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...