ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக தலைமை சர்ச்சைக்கு மத்தியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா

அதிமுக தலைமை சர்ச்சைக்கு மத்தியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா

 சசிகலா

சசிகலா

VK Sasikala:ஏற்கனவே ஓபிஎஸ் இபிஎஸ் என அதிமுக இரண்டாக பிரிந்து காணப்படும் சூழலில் சசிகலாவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா இன்று தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையை எழுந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்துவரும் ஓபிஎஸ், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என கூறிவருகின்றனர். இதனால் கட்சிக்குள் மோதல் போக்கு நிலவுகிறது. பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். இந்நிலையில், அதிமுக தொண்டர்களை சந்திக்கும் விதமாக தனது அரசியல் சுற்றுப்பயணத்தை வி.கே.சசிகலா இன்று தொடங்குகிறார். இது தொடர்பாக தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அவர் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

அதில்,  எம்ஜிஆரின் பெருமைகளையும், ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதன்படி, ஜூன் 26-ம்தேதி (இன்று) பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் செல்கிறேன்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் பங்கேற்ற விழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. கேட்டு பாட வைத்த தமிழிசை செளந்தரராஜன்

பின்னர், அங்கிருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். குண்டலூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை,எஸ்விஜி புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டையில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திக்கிறேன். ஆர்.கே.பேட்டையில் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறேன். பிறகு, அம்மையார்குப்பம் சென்று தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறேன்’ என கூறியுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் இபிஎஸ் என அதிமுக இரண்டாக பிரிந்து காணப்படும் சூழலில் சசிகலாவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

First published:

Tags: ADMK, VK Sasikala