ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எல்லா விஷயங்களிலும் 1.5 கோடி தொண்டர்களிடம் கருத்துக் கேட்க முடியாது - இபிஎஸ் தரப்பு வாதம்!

எல்லா விஷயங்களிலும் 1.5 கோடி தொண்டர்களிடம் கருத்துக் கேட்க முடியாது - இபிஎஸ் தரப்பு வாதம்!

அதிமுக பொதுக்குழு வழக்கு

அதிமுக பொதுக்குழு வழக்கு

“2,460 உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர். இது 94.5% ஆதரவு ஆகும்" - இபிஎஸ் தரப்பு வாதம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் வாதிட்ட இபிஎஸ் தரப்பினர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என வாதிட்டனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ் தரப்பில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று தொடங்கியது.

இந்த வழக்கு விசாரணையில், ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் இன்று இபிஎஸ் தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டது. அதில் வாதிட்ட இபிஎஸ் தரப்பு, “ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கியபோது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதுதான் தற்போது பின்பற்றப்பட்டது. ஆனால், முன்னர் எதிர்ப்பு தெரிவிக்காத ஓ.பி.எஸ்., தற்போது ஒற்றைத்தலைமை குறித்து தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என கூறுகிறார்” என தெரிவித்தனர்.

மேலும், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல, மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால்தான்.

இரட்டை தலைமையில் ஆளுக்கொரு கருத்து இருக்கும், அப்போது ஒரு முடிவெடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும் அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவேதான் கட்சியை வழிநடத்தவும், முடிவெடுக்கவும் ஒற்றைத் தலைமை என முடிவு எடுக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு

பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு; அப்படி இருக்கும்போது ஓ.பி.எஸ் தரப்பு அடிப்படை உறுப்பினர்களை கூட்ட வேண்டும் என்று ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்?” என கேள்வி எழுப்பினர்.

இதனைதொடர்ந்து, “ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 2,460 உறுப்பினர்கள் பங்கேற்று எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர். இது 94.5% ஆதரவு ஆகும்” என தெரிவித்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை தள்ளி வைத்தது.

First published:

Tags: ADMK, OPS - EPS, Supreme court