'அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஆச்சரியமளிக்கிறது' - கே.டி. ராகவன் காட்டம்

'அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஆச்சரியமளிக்கிறது' - கே.டி. ராகவன் காட்டம்

கே.டி. ராகவன்

கூட்டணியை சீர்குலைக்கும் சக்திகளோடு புகழேந்தி போன்றவர்கள் கைகோர்த்துள்ளனரோ என சந்தேகிக்க தோன்றுகிறது.

 • Share this:
  அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி தர்மத்தை மீறி பொறுப்பற்ற முறையில் பேசுவதாக கே.டி. ராகவன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

  தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அஇஅதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் முருகன் அவர்களை பாஜக தலைமை நீக்க வேண்டும் என்று கூறி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

  அஇஅதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றளவும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது என்றும் பாஜக - அதிமுக கூட்டணி தொடர்கிறது என்பதை தெளிவுபடுத்திய பிறகும், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி தர்மத்தை மீறி பொறுப்பற்ற முறையில் பேசுவது ஆச்சரியம் அளிக்கிறது.

  Also read: பொதுப்பிரிவு இடஒதுக்கீடு ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமல்ல.. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

  கூட்டணியை சீர்குலைக்கும் சக்திகளோடு புகழேந்தி போன்றவர்கள் கைகோர்த்துள்ளனரோ என சந்தேகிக்க தோன்றுகிறது. பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை குறித்து பேசுவதற்கு புகழேந்தி போன்றவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அதிமுகவின் தலைமை இவர்களை போன்றவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கும் என எதிர்பார்க்கிறேன்.”

  இவ்வாறு அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: