• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நதியினில் பெரு வெள்ளம்; கரையினில் நெருப்பு.. ஓ.பி.எஸ் பாடிய பாட்டுக்கு என்ன அர்த்தம்..?

நதியினில் பெரு வெள்ளம்; கரையினில் நெருப்பு.. ஓ.பி.எஸ் பாடிய பாட்டுக்கு என்ன அர்த்தம்..?

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

எங்களுடைய நிலை அவை முன்னவரான துரைமுருகனுக்கு நன்றாக தெரியும். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் என அவையில் பன்னீர்செல்வம் ஒரு பாடல் பாடினார்.

  • Share this:
    சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைதலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பாட்டுபாடி இதுதான் என் நிலைமை என்றார்.

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் நேற்று கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, அதிமுக வெளிநடப்பு செய்தது.அதிமுக சொன்ன சாதக பாதக கருத்துகளை கலந்தாலோசிக்காமல் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்துவதால் நாங்கள் எங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    Also Read: 50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்.. 6 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்ட போலீஸார்

    சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்த பின்னர் அவை முன்னவர் துரைமுருகன் அதிமுக வெளிநடப்பு  குறித்து ஒரு கருத்தை பதிவு செய்தார். சிறிது நேரத்தில் அதை நீக்கிவிடும்படி சபாநாயகரிடம் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து அந்த கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

    Also Read: திருமணத்தின்போது மணமகன் செய்த காரியம்.. பளார் விட்ட மணமகள் – வைரலாகும் வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வெளிநடப்புக்கு பின் மீண்டும் அவைக்குள் வந்து பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அவை முன்னவர் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட மரியாதை உண்டு. அவராகவே  அந்த கருத்தை நிக்கியதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எங்களுடைய நிலை அவருக்கு நன்றாக தெரியும். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.  நதியினில் பெரு வெள்ளம்; கரையினில் நெருப்பு; நடுவில் இறைவனின் சிரிப்பு இது தான் என் நிலைமை என்பதை சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: