மூன்று தொகுதி இடைத் தேர்தல்கள்! தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரமாக்கிய அ.தி.மு.க

மூன்று தொகுதி இடைத் தேர்தல்கள்! தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரமாக்கிய அ.தி.மு.க
அதிமுக அலுவலகம்
  • News18
  • Last Updated: October 7, 2019, 11:54 AM IST
  • Share this:
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என பாஜக தெரிவித்துள்ளது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தமது பிரசாரத்தை தொடங்கினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கிய அதிமுக, வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தவிர்த்தது. பாஜகவினரும் அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் எதுவும் செய்யவில்லை. இதனால் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், சென்னை தியாகராயா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இதனிடையே, நாங்குநேரி தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், எம்,ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக நெல்லையில் உள்ள ஜான்பாண்டியன் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள், நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.  தொடர்ந்து சீவலபேரி தொகுதியில், அமைச்சர்களுடன் சேர்ந்து அதிமுக வேட்பாளர் நாராயணன் பிரசாரத்தை தொடங்கினார். இதேபோல், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர்.

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து அப்பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். கூட்டணி கட்சி ஆதரவோடு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும் என ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார்.Also see:

First published: October 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்