Home /News /tamil-nadu /

பகுத்தறிவு பேசும் திமுக பவுர்ணமியன்று மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவித்துள்ளது: ஜெயக்குமார்

பகுத்தறிவு பேசும் திமுக பவுர்ணமியன்று மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவித்துள்ளது: ஜெயக்குமார்

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

ஜெயலலிதா கொண்டுவந்த நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதுதான் திராவிட மாடல் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

    பகுத்தறிவு பேசும், பெரியார் பாதையில் வந்ததாக கூறிக்கொள்ளும் திமுக பவுர்ணமி தினத்தில் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஓடும், நீட் இருக்காது, மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும், மாதம் ஒருமுறை மின்சார ரீடிங் எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பல்வேறு உத்தரவாதங்களை திமுக அளித்தது. ஆனால் ஏதாவது ஒன்றை செய்துள்ளார்களா?

    இந்த ஆட்சி முழுமையான நம்பிக்கை துரோகத்தை செய்துள்ளது.  மக்கள் வெறுத்துபோய் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் இது பிரதிபலிக்கும். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு இம்மாதம் 24ம் தேதிதான் விண்ணப்பம் தொடங்குகிறது. பகுத்தறிவு கொள்கையில் வந்தவர்கள், தந்தை பெரியாரின் பாதையில் வந்தவர்கள் என கூறிக்கொள்ளும் திமுக பவுர்ணமி நாளில் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

    மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்ய இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவோம். ஜெயலலிதா கொண்டுவந்த நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதுதான் திராவிட மாடல்.  உருப்படாத திட்டங்களை கொண்டுவருவதுதான் திமுகவின் திராவிட மாடல்.

    இதையும் படிங்க: காமராஜர் கொண்டுவந்தது காங்கிரஸ் மாடல் அல்ல அதுவும் திராவிடம் தான் - ஆ.ராசா


     

    ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காக போராடும் இயக்கம் அதிமுக மட்டுமே. மக்களின் உரிமை பாதிக்கப்பட்டால் அதிமுக வீதியில் இறங்கி போராடும். ஆட்சியில் இருந்தபோது அதிமுக ஹிரோவாக இருந்தது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக ஜிரோவாக உள்ளது. அதிமுக மற்றும் அமமுக இணைய வாய்ப்பே இல்லை. சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று ஜெயக்குமார் பேசினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, DMK, Jayakumar

    அடுத்த செய்தி