கருப்பாக இருப்பதால் எருமை மாடும் திராவிடரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர்
சீமான் பேசியதற்கு
அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டார்க் திராவிடன் -பெருமைமிகு தமிழன் என்ற வாசகத்துடன் தனது புகைப்படத்தை நேற்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அவரது வாசகத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் “ஒன்று தமிழனாக இருக்க வேண்டும் அல்லது திராவிடனாக இருக்க வேண்டும்.மோடிகூட திராவிடர் என்றும் தானும் திராவிடர் என்றும் ஹெச்.ராஜாவும் கூறுகிறார். தேவைப்பட்டால் இந்தியன், திராவிடன், தமிழன் என்கிறீர்கள். ஏன் இவ்வளவு குழப்பம்.
நான் தமிழன் என்று யுவன் பெருமையாக கூறவேண்டும். யுவன் சின்ன பிள்ளை. அவருக்கு தெரியவில்லை. எல்லாவற்றையும் விமர்சனம் செய்யும் நோக்கில் இருந்தால் அதுவே நோயாகிவிடும். தென்னாப்பிரிக்காவில் எல்லோரும் கருப்பாக இருக்கிறார்கள், அவர்கள் திராவிடர்களா. எருமை மாடும் கருப்பாக உள்ளது. அது திராவிடரா என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க: எருமை கூடத்தான் கருப்பு.. அது திராவிடரா? -சீமான் கேள்வி
திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிட்டு சீமான் பேசியுள்ளதற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,
மேலும் படிக்க: பாலிடெக்னிக் படிப்பு... மாணவர்களிடையே ஆர்வம் இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
கருப்பாக இருப்பதால் திராவிடர் ஆக முடியுமா என்று சீமான் கேட்டிருக்கிறார். இது திராவிடத்தை இழிவு படுத்தும் கருத்தாகும். அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் எருமை மாடுடன் திராவிடத்தை ஒப்பிட்டு பேசுவது, திராவிடத்தை கொச்சைப்படுத்துவதாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.