ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அப்போ 12.. இப்போ 6..! அணி மாறும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுக

அப்போ 12.. இப்போ 6..! அணி மாறும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுக

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்து வந்தவர்கள் திடீரென எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறியுள்ளதால் ஓ.பி.எஸ்- சின் பலம் வெகுவாக குறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஒ.பி.எஸ்-சை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு ஆரம்பத்தில் ஆதரவு அளித்து வந்த நிர்வாகிகள் தற்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பியுள்ளனர்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போது ஓபிஎஸ்-சுடன் பயணித்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன், எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து ஆசியை பெற்று, தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற சூறாவளி கடந்த 8 நாள்களாக சுழன்றடித்து வருகிறது. பிரச்னைக்கு மைய புள்ளிகளான ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தங்களது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுவரை பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த திருவள்ளுவர் தெற்கு மாவட்டச் செயலாளர் அலக்சாண்டர், பூந்தமல்லி நகர செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Also Read:  அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு... தர்மம் மீண்டும் வெல்லும்- ஓ. பன்னீர்செல்வம்

இந்நிலையில் தொடக்கத்தில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு அளித்து வந்தவர்கள் திடீரென முகாம் மாறி வருகின்றனர். தேனி மாவட்ட செயலாளர் சையது கான் , கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அசோகன்,  திருச்சி மாநகர் மா.செ வெள்ளமண்டி நடராஜன் , தஞ்சாவூர் தெற்கு வைத்தியலிங்கம், வடக்கு சுப்ரமணி, பெரம்பலூர் ராமச்சந்திரன் ஆகிய மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே தற்போது ஓ.பி.எஸ் க்கு ஆதரவாக உள்ளனர்

இதுவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துக்கு  ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் தச்சை கணேஷ ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் , திருவள்ளுவர் தெற்கு மாவட்டச் செயலாளர் அலக்சாண்டர் , அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக்,  திருவள்ளூர் வடக்கு மா.செயலாளர் சிறுணியம் பலராமன்

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்துள்ளனர்.

ஓபிஎஸ் ஆதரவாக 12 மாவட்டச் செயலாளர்கள் உள்ளதாக வைத்தியலிங்கம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 6 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்து வந்தவர்கள் திடீரென எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறியுள்ளதால் ஓ.பி.எஸ்- சின் பலம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவில் தற்போது அராஜகமும் சர்வாதிகாரமும் உள்ளதாகவும் தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும் மீண்டும் தர்மம் வெல்லும் என்றும் ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

First published:

Tags: ADMK, Edappadi palanisamy, O Panneerselvam, Political, Tamil News