முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு: அதிமுக தரப்பில் வழக்கு தொடர உள்ளோம்: எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு: அதிமுக தரப்பில் வழக்கு தொடர உள்ளோம்: எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சிக்காலத்தில் விதி110ன்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 97 சதவீத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் அதிமுக வழக்குத் தொடர உள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா நோயாளிகளுக்காக மாலை 5 முதல் 6 வரை ஒதுக்கப்பட்ட நேரத்தில், அதிக அளவில் கள்ள ஓட்டு பதிவாகியுள்ளதாகவும், அதன் காரணமாக சென்னையில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை 6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்.

மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவனே உறவு கொண்டாலும், அது பாலியல் வன்கொடுமையே: கர்நாடக உயர்நீதிமன்றம்

மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று விதி 110ன்கீழ் அதிமுக வெளியிட்ட அறிவிப்புகள் பெருமளவில் நிறைவேற்றவில்லை என்று சட்டப்பேரவையில் குற்றம்சாட்டியுதாகவும், ஆனால் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் விதி110ன்கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 97 சதவீத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசினார். அப்போது பட்ஜெட் குறித்த பல்வேறு புள்ளி விவரங்களை மற்றும் கருத்துக்களை தெரிவித்தும், பட்ஜெட்டை விமர்சனம் செய்தும் பேசினார். அதற்கு அவ்வப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டு பதிலும் அளித்தார்.

அதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் பற்றி பேசி முடிக்கும் முன்பே, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சபையிலிருந்து வெளியேறிவிட்டார். அமைச்சரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று அவையில் இப்பிரச்னையை எழுப்ப முயன்றார். சபாநாயகர் அனுமதி மறுக்கவே அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்போது நிதியமைச்சர் அவையில் இருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நிதியமைச்சர் அதிமுகவை அவமதிக்கும் வகையில் அவையிலிருந்து வெளியேறியது கடும் கண்டத்திற்குரியது என்று தெரிவித்தார். பின்னர் அதிமுக உறுப்பினர்கள் நிதியமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து விட்டு சென்றனர்.

First published:

Tags: Edappadi palanisamy, EPS, TN Assembly