முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''பாஜகவிடம் எச்சரிக்கையாக இருக்கிறோம்'' - ஓபனாக பேசிய பொன்னையன்

''பாஜகவிடம் எச்சரிக்கையாக இருக்கிறோம்'' - ஓபனாக பேசிய பொன்னையன்

பொன்னையன்

பொன்னையன்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு இரட்டை இல்லை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் சொந்தம், இதனை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

எம்.ஜி.ஆர், ஜெயலிலதாவிற்கு பிறகு இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி சாமிக்கு தான் சொந்தம் என்றும் வடமாநிலங்களில் பாஜக தங்கள் நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது, எப்படி எதிர்த்து என்று எங்களுக்கு தெரியும் என்றும் ஓ. பன்னீர் செல்வம் ஒரு செல்லாக்காசு என்றும் அதிமுக மூத்த தலைவர் பொனையன் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தேர்தல் ஆணையம் துவக்கத்தில் சட்ட விதிகளை பின்பற்றாமல் கைவிட்டுவிட்டு தற்போது நீதிமன்றத்தை கை காட்டுவதை ஏற்றுகொள்ள முடியாது, சட்டத்தில் இருந்து தேர்தல் ஆணையம் விலகி உள்ளது இருப்பினும் நீதிமன்றம் இதனை சரி செய்யும். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் கூட எடப்பாடி பழனிச்சாமி ஒரு சிறந்த முதல்வராக இருந்தார் என ஏற்று கொள்கின்றனர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு இரட்டை இல்லை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் சொந்தம், இதனை மக்கள் ஏற்றுக்கொண்டனர், 94.5% பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர் எனவே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்கும்” என தெரிவித்தார்.

மேலும் பாஜக இரண்டு தரப்பு தலைவர்களையும் சந்திப்பது தொடர்பாக பேசிய பொன்னையன், “பாஜக வட இந்தியாவில் கூட்டணி கட்சிகளை எவ்வாறு வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர் என அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தலை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் போட்டியிடுவோம். திமுக தவிர மற்ற எந்த கட்சிகள் வேண்டும் என்றாலும் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கலாம் அந்த வகையில் பாஜக உள்ளனர்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஓபிஎஸ் ஒரு செல்லா காசு என்றும் அவருக்கு எந்த ஒரு கட்சியும் இல்லை. யார் வேண்டும் என்றாலும் சுயேட்சை வேட்பாளரை நிறுத்தலாம் அவர் கட்சியை துவங்கினால் அதற்கு சட்ட பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, BJP, Edappadi Palaniswami, Ponnaiyan