Home /News /tamil-nadu /

சசிகலாவின் டார்க்கெட்.. காய் நகர்த்தும் தினகரன்.. ஆக்‌ஷன் எடுக்கும் அதிமுக - குழப்பத்தில் தொண்டர்கள்

சசிகலாவின் டார்க்கெட்.. காய் நகர்த்தும் தினகரன்.. ஆக்‌ஷன் எடுக்கும் அதிமுக - குழப்பத்தில் தொண்டர்கள்

சசிகலா, ஒபிஎஸ், ஈபிஎஸ்

சசிகலா, ஒபிஎஸ், ஈபிஎஸ்

சட்டமன்றத் தேர்தலில் விட்டதை உள்ளாட்சி தேர்தலில் அறுவடை செய்து தனது மவுசை காட்ட வேண்டும் என தினகரன் எண்ணுகிறார்.

  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் சைலண்ட் மோடில் இருந்துவிட்டு இப்போது ஆக்டிவாக தொடங்கியிருக்கிறார்.

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி என அறியப்படும் சசிகலா அ.தி.மு.க தேர்தல் தோல்விக்கு பிறகு தொடர்ந்து அக்கட்சி தொண்டர்களிடம்  பேசி வருகிறார். தினம் ஒரு சசிகலா ஆடியோ வெளியாகிறது. கழகத்தை மீட்போம் அம்மா தலைமையிலான ஆட்சியை கொண்டு வருவோம். எதிரிகளையும், துரோகிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என பேசி வருகிறார். தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று சொன்னார்கள் அதனால்தான் நான் அமைதியாக விலகினேன் என்று தொண்டர்களிடம் சசிகலா பேசி வருகிறார். உண்மையான தொண்டர்களின் பலத்தோடு கழகத்தை மீட்பேன் என்கிறார் சசிகலா. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாக சசிகலா கூறியுள்ளார்.

  Also Read: அரசியலுக்கு இனி வரவே மாட்டேன் - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

  அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர் என டிடிவி தினகரனும் கூறிவருகிறார். நாங்கள் அ.தி.மு.க-வை மீட்டெடுப்போம் எனக் கூறிவந்த டிடிவி தினகரன் அ.தி.மு.க-வுக்கு எதிராக தேர்தலில் களமிறங்கினார். சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டியிட்ட போது தினகரனுக்கு ஆதரவாக சசிகலா வாய்ஸ் கொடுக்கவில்லை மவுனமாகவே இருந்தார். தினகரனுக்காக வாய்ஸ் கொடுத்தால் அது தன்னுடைய அரசியல் பயணத்துக்கு ஆபத்தாக முடியும் என்பதை அறிந்தே மவுனம் காத்தார் எனக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பின்னர் டிடிவி தினகரன் - சசிகலா சந்திப்பு நிகழவில்லை. இதன்மூலம் தினகரன் தனித்துவிடப்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  இந்நிலையில்தான் சைலெண்ட் மோடில் இருந்த தினகரன் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் மூலம் உற்சாக மூட்டியுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின் படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முழுவீச்சில் தேர்தலுக்குத் தயாராவோம் என ஜூலை 9-ம் தேதி அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தமட்டில் கட்சி, சின்னம் தாண்டி தனிநபர் செல்வாக்கு செல்லுபடியாகும். சட்டமன்றத் தேர்தலில் விட்டதை உள்ளாட்சி தேர்தலில் அறுவடை செய்து தனது மவுசை காட்ட வேண்டும் என தினகரன் எண்ணுகிறார்.

  Also Read: மன்றத்தை கலையுங்கள்...அரசியலுக்கு முழுக்கு போட்ட ரஜினி - மக்கள் மன்ற சந்திப்பின் படங்கள்

  அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறி டிடிவி தினகரன் பின்னால் அணிவகுத்து பெரிய தலைகள் எல்லாம் அ.ம.மு.க-வில் இருந்து பிரிந்து தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டனர். மேலும் சில நிர்வாகிகள் தாய் கழகமான அ.தி.மு.க-வுக்கே திரும்பிவிட்டனர். இனி கட்சியில் இருப்பவர்களையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் தினகரனுக்கு இருக்கிறது. இதற்கு உள்ளாட்சித் தேர்தல் கைக்கொடுக்கும் என தினகரன் நம்புகிறார். உள்ளாட்சித் தேர்தல் மூலம் சரிந்த செல்வாக்கை மீண்டெடுத்துவிடலாம் என்பதே டிடிவி தினகரனின் கணக்கு.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மத்தளத்துக்கு இரு பக்கத்திலும் அடிபோல, அதிமுக தலைமையை சசிகலாவும், டிடிவி தினகரனும் டார்சர் செய்து வருகின்றனர். அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக ஒபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் எனக்கூறி சிலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. சசிகலா அ.தி.மு.க-வை அபகரிக்க முயற்சி செய்கிறார். தனிக்கட்சி தொடங்கி சசிகலா சுற்றுப்பயணம் போகட்டும். அ.தி.மு.க போர்வையில் அவர் செல்ல வேண்டாம் என அதிமுக தலைமை கூறுகிறது. அ.தி.மு.க தொண்டர்களின் ஆதரவு எங்களுக்கே என்கின்றனர். சசிகலா, அ.ம.மு.க-வை கட்சியில் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்கிறது அ.தி.மு.க தலைமை. உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் மாவட்டம் தோறும் நடந்து வருகிறது.

  இந்நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் கட்சி நிர்வாகிகள் , தொண்டர்களை கட்சியை விட்டு நிக்கும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க-வினர் தீர்மானம் நிறைவேற்றும் காட்சிகளும் அரங்கேறி வருகிறது. ஓபிஎஸ் – ஈபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க வேண்டும் என கோவில்பட்டி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதனால் யாரை நம்புவது என்கிற பெருங் குழப்பத்தில் கட்சித் தொண்டர்கள் இருக்கிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, Edappadi Palanisami, O Panneerselvam, Politics, Sasikala, Tamilnadu, TTV Dhinakaran

  அடுத்த செய்தி