ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டப்பேரவையில் நடந்தது ஜனநாயக படுகொலை.. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த அதிமுக

சட்டப்பேரவையில் நடந்தது ஜனநாயக படுகொலை.. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த அதிமுக

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    தமிழக சட்டப்பேரவை இரண்டாவது நாளாக இன்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இபிஎஸ் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டபேரவையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அப்போது பேரவைத் தலைவர், வினாக்கள் விடைகள் நேரம் முடிந்து கேள்வி நேரத்துக்குப் பின்னர், இதுகுறித்து கேள்வி எழுப்புங்கள். அப்போது நான் பதிலளிக்கிறேன் என்றார். ஆனால், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இபிஎஸ், உங்களைச் சந்தித்து கடிதம் கொடுத்திருக்கிறோம் எனவே பதிலளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: மயங்கிய ஜெயலலிதா.. 4 பேர் குற்றவாளிகள்.. பல திடுக் தகவல்களை சொன்ன ஆணையம்! முழுத் தகவல்!

    அப்போது மீண்டும் பேரவைத் தலைவர் அப்பாவு, நீங்கள் பேசும் எதுவும் அவைக் குறிப்பில் பதிவு செய்யப்படாது. ஏற்கெனவே 89-ல் ஜானகி அவர்கள் பதவிப்பிரமாணத்தின்போது இதேபோல்தான் பிரச்சினை செய்தீர்கள். எனவே பிரச்சினை செய்யாதீர்கள், வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னர்தான் பேச வேண்டும். இதனால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: 2 நாள் வேண்டாம்.. நாளைக்கு வரட்டும்' - அதிமுகவுக்கு ஆதரவாக சபாநாயகரிடம் குரல் கொடுத்த துரைமுருகன்!

    சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவு திமுக தலைவர் ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டினார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் நடத்த சம்பவம் குறித்து அதிமுக கடும் கண்டனம் தெரிவித்து நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: ADMK