Home /News /tamil-nadu /

நாகப்பட்டினத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிய அதிமுகவினர்!

நாகப்பட்டினத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிய அதிமுகவினர்!

ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிய அதிமுகவினர்.

ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிய அதிமுகவினர்.

ஆட்டோக்கள் இயங்குவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

நாகப்பட்டினத்தில் ஊரடங்கு காரணமாக சிரமப்பட்டு வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அவர்களின் நிலை அறிந்து உதவியிருக்கின்றனர் அதிமுகவினர்.

நாகூர் தர்ஹா, வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்கார வேலன் ஆலயம் என சுற்றுலாத் தளங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் நிறைந்த பகுதியாக நாகை மாவட்டம் இருந்து வருகிறது. இதனால் சுற்றுலா வாசிகளுக்காக எப்பொழுதும் நாகையில் ஷேர் ஆட்டோக்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், கொரோனா நோய்ப் பரவல் காரணமாக போடபட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த இரண்டு மாதங்களாக ஆட்டோக்கள் ஓடாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களின் நிலை அறிந்த அதிமுகவின் நாகை நகரச் செயலாளர் தங்க கதிரவன், ஆட்டோ ஓட்டுநர்கள் நிலை குறித்து தமிழக கைத்தறி துறை அமைச்சரும், அதிமுகவின் நாகை மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ்.மணியனிடம் கூறியுள்ளார். பின்னர் அமைச்சர் உடனடியாக அவர்களுக்கு முதற்கட்ட நிவாரணம் வழங்க அறிவுறுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நாகையில் வருமானமின்றி தவித்து வந்த 372 பேருக்கு மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் இன்று வழங்கப்பட்டன. நாகையில் சமூக இடைவெளியுடன் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நாகை அதிமுக நகரச் செயலாளர் தங்க கதிரவன் காய்கறிகளை வழங்கினார்.

ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளைக் கொண்டு வந்துள்ள தமிழக அரசு, ஆட்டோக்கள் இயங்குவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Nagapattinam, Share Auto

அடுத்த செய்தி