ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவில் 2 சீட்டுக்கு 60 பேர் போட்டி..!!

மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவில் 2 சீட்டுக்கு 60 பேர் போட்டி..!!

அதிமுக மாநிலங்களை உறுப்பினர் யார்?

அதிமுக மாநிலங்களை உறுப்பினர் யார்?

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக, அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57  மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  தமிழகத்தில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் மற்றும் ராஜேஷ்குமார், எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

    தமிழகத்திலிருந்து அதிமுகவிற்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்கள் கிடைக்கவுள்ள நிலையில், சுமார் 60 பேர் வரை போட்டியிட அக்கட்சியின் தலைமைக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

    இதே போல், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜேசிடி பிரபாகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரும் களத்தில் இருப்பதாக தெரிகிறது. அதிமுக அமைப்புச் செயலாளரான செம்மலைக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படாததால், தற்போது எம்.பி. பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது, மாநிலங்களில் அதிமுக சார்பில் பெண் உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதால், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோரும் சீட் கிடைக்க கடும் முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையும்  படிங்க: மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

    இதுபோக, அதிமுகவின் விந்தியா, அபரூபா சுனந்தனி ஆகியோரும் மாநிலங்களவை எம்.பி.க்கான சீட்டிற்கு போட்டி போடுவதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவருக்கும் சீட் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, Rajya sabha MP