Home /News /tamil-nadu /

அதிமுக அலுவலக வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

அதிமுக அலுவலக வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

தற்போதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தான் என்பதால்,  அதிமுக தலைமை அலுவலகம் செல்ல அவருக்கு முழு அதிகாரம் உண்டு என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    கடந்த மாதம் 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

    அதனை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.  கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில்  இன்று நடைபெற்றது.

    இதையும் படிக்க: அதிமுகவில் இணைந்து செயல்படலாம்.. சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

    அப்போது,  பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு,  தற்போதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தான் என்பதால்,  அதிமுக தலைமை அலுவலகம் செல்ல அவருக்கு முழு அதிகாரம் உண்டு என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. ஆனால், வழக்கை விசாரிக்காமல் உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என கூறிய தலைமை நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டார். அதைதொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: AIADMK, OPS - EPS, Supreme court

    அடுத்த செய்தி