ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுகவில் திடீரென எழுந்த தலைமை சர்ச்சை... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு...!

அதிமுகவில் திடீரென எழுந்த தலைமை சர்ச்சை... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு...!

முதல்வர் மற்றும் துணை முதல்வர் (கோப்புப் படம்)

முதல்வர் மற்றும் துணை முதல்வர் (கோப்புப் படம்)

தேர்தலில் தோல்வியடைந்தது குறித்தும், ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சை குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்துள்ள நிலையில் வரும் பன்னிரெண்டாம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவை வழிநடத்த ஒற்றைத்தலைமை வேண்டும் என அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினா ராஜன் செல்லப்பா கருத்து கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக-வின் நிர்வாக முறைகள் குறித்தோ, தேர்தல் முடிவுகள் குறித்தோ தங்களது கருத்துக்களை பொது வெளியில் கூறக் கூடாது என்று கட்சியினருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் வரும் 12-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தேர்தலில் தோல்வியடைந்தது குறித்தும், ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சை குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also see... அதிமுகவின் தோல்விக்கு காரணம் இதுதான் - சிவி சண்முகம் புது விளக்கம்

Also see...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see...


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: ADMK