ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குட்கா, கஞ்சா குறித்து பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குட்கா, கஞ்சா குறித்து பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

குட்கா, கஞ்சா தமிழ்நாட்டில் பரவியதற்கு காரணமே அதிமுக ஆட்சி தான் -முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குட்கா,கஞ்சா குறித்து பேச அதிமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டதாகவும், பள்ளிகள், கல்லூரிகளின் அருகிலேயே போதைப் பொருட்கள் விற்பனை சாதாரணமாக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

2138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளது, வழக்குகளை விட கைது எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாக குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், குட்கா, கஞ்சா பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை என்றும்,கடந்த ஆட்சியில் குட்கா பற்றி பேசி அதை சட்டசபைக்கு கொண்டுவந்து காட்டியதே நான் தான் என்றும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் கடைசி 2 ஆண்டுகளில் 1.95 லட்சம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 12,910 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சுட்டிகாட்டினார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 19,507 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டதாக கூறிய அவர்,அதிமுக ஆட்சியில் தவற விட்டதை திமுக ஆட்சியில் பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்றும்,டிஜிபி, அமைச்சரெல்லாம் குட்கா விசாரணைக்கு சென்ற வரலாறு அதிமுக ஆட்சியில் இருந்ததாகவும் கூறினார்.

இதையும் படிங்க: ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றம்... மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று வீடுகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக வாட்ஸ் அப்பில் வருவதை கூறாமல், ஆதாரத்துடன் பேசினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர், கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமும், பள்ளி, கல்லூரிகளின் அருகில் அதிகமாக விற்பனையாவதைத் தடுக்க வேண்டும் எனவும்,பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கஞ்சா பயன்படுத்துவதாகவும், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பேசி ரயில்கள், பேருந்துகள், கடல் மூலம் கஞ்சா கடத்தப்படுகிறது என்றும், அதனை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

மேலும் படிக்க|: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை அரசு நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல்

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், குட்கா, கஞ்சா தமிழ்நாட்டில் பரவியதற்கு காரணமே அதிமுக ஆட்சி தான் என்றும், திமுக நடவடிக்கை எடுப்பதால் தான் கைது எண்ணிக்கை காட்டப்படுவதாகவும், இது நடவடிக்கை எடுக்கும் ஆட்சி என்றும் உறுதியளித்தார்.

குட்கா வழக்கில் தீர்ப்பு வரும் போது யார் குற்றவாளி என்பது தெரியப்போகிறது என கூறிய அவர், நடவடிக்கை எடுப்பதால் தான் கைது நடப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, யார் கடத்துகிறார்கள் எங்கே கடத்துகிறார்கள் என்ற விவரங்களை கூறினால் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.

Published by:Murugesh M
First published:

Tags: ADMK, DMK, MK Stalin, TN Assembly