Home /News /tamil-nadu /

தீர்ப்பு வந்த மறுநாளே அதிமுக ஆட்சி கவிழும்: ஸ்டாலின் நம்பிக்கை!

தீர்ப்பு வந்த மறுநாளே அதிமுக ஆட்சி கவிழும்: ஸ்டாலின் நம்பிக்கை!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

  • 1 minute read
  • Last Updated :
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், தீர்ப்பு வந்த மறுநாளே அதிமுக ஆட்சி கவிழும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை பெரம்பூரில் திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் தங்கள் பதவிக்காக தமிழகத்தின் சுயமரியாதையை இழக்க துணை போவதாக குற்றம்சாட்டினார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வந்த மறுநாளே அதிமுக ஆட்சி கவிழும் என்றும், பின்னர் நடக்கும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார். திராவிட இயக்கத்தை அழிக்கும் நோக்கத்தில் யார் யாரோ புதிதாக வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், யார் வந்தாலும் அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என தெரிவித்தார்.
    Published by:Veeramani Panneerselvam
    First published:

    Tags: ADMK, DMK, MK Stalin, MLAs Suspension

    அடுத்த செய்தி