மின்கட்டண விஷயத்தில் தமிழக அரசு மனிதநேயம் இல்லாமல் செயல்படுகிறது - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

கார்த்தி சிதம்பரம், எம்.பி.,

மின்கட்டணம் விஷயத்தில் மனிதநேயம் இல்லாமல் செயல்படுவதாக தமிழக அரசு மீது கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி நான்கு சாலைகள் சந்திப்பில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்கை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.

  இதில் எம்.பி கார்த்திக் சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், ஊரடங்கு சமயத்தில் வேலையின்றி சிரமப்படும் மக்களுக்கு அரசு நேசக்கரம் நீட்ட வேண்டும். பாதகத்தை ஏற்படுத்தக் கூடாது.

  அதிக மின்கட்டணத்தை வசூலித்து மனிதநேயமற்ற அரசாகச் செயல்படுகிறது மாநில அரசாங்கம். ஒன்று இலவச மின்சாரம் வழங்க வேண்டும், இல்லாவிட்டால் மின்கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க வேண்டும். மின்கட்டணம் பில்லே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

  உயர் மின் கோபுர விளக்கை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.


  சாத்தான்குளம் பிரச்னையை நீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பு அரசே விசாரணையைத் தொடங்கி இருக்கலாம். இருவர் மரணத்திற்கு பல பேர் காரணம். அனைத்து உண்மைகளும் வெளிவர வேண்டும். ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குறித்தும் விசாரிக்க வேண்டும்.

  கொரோனா தடுப்பு மருந்தை உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. தடுப்பு மருந்து வந்தாலும் சர்வதேச அமைப்புகளின் ஒப்புதலுடன் வர வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு மருந்து மீது நம்பிக்கை ஏற்படும்.

  Also see:

  மத்திய அரசு வெறும் அறிக்கை விடும் அரசாக உள்ளது. முதலில் சீனா ஊடுருவவில்லை என்று கூறியது. தற்போது சீனா படைகள் 2 கி.மீ வாபஸ் பெற்றதாகக் கூறுகிறது. இதுவே முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என்று கூறினார்.
  Published by:Rizwan
  First published: