• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா... பொன்விழா கல்வெட்டால் சர்ச்சை

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா... பொன்விழா கல்வெட்டால் சர்ச்சை

சசிகலா

சசிகலா

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு சசிகலா திறந்து வைத்த கல்வெட்டில் அதிமுக பொதுச்செயாலர் என்று அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
    அதிமுக தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு பொன்விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டையொட்டி சென்னை பாண்டிபஜாரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த சசிகலா அதிமுக கொடியேற்றினார். இதையடுத்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தார்.

    இதையடுத்து கல்வெட்டு ஒன்றையும் சசிகலா திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பில், அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து வரும் நிலையில் தற்பொழுது இந்த கல்வெட்டு மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.



    இதனிடையே சசிகலா ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அதிமுக பொன்விழா மலரை வெளியிட்டார். இதையடுத்து அங்குள்ள காது மற்றும் வாய் பேச முடியாத பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறி, அவர்களுடன் சசிகலா மதிய உணவு உட்கொள்கிறார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கட்டடம் முழுவதும் பச்சை மற்றும் வெள்ளை நிற மின்விளக்குகளால் ஒளிருகிறது. அலுவலக வாயில் முன்பு பிரம்மாண்ட வாழை மரங்கள் கட்டுப்பட்டு. பொம்மை யானைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: