• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக பொன்விழா : தலைமை கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய ஓபிஎஸ் - ஈபிஎஸ்

அதிமுக பொன்விழா : தலைமை கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய ஓபிஎஸ் - ஈபிஎஸ்

 தலைமை கட்சி அலுவலகத்தில்  கொடியேற்றிய ஓபிஎஸ் - ஈபிஎஸ்

தலைமை கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய ஓபிஎஸ் - ஈபிஎஸ்

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு கட்சி தலைமை அலுவலகத்தில் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியேற்றினர்.

  • Share this:
    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1972 ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுக தொடங்கப்பட்டது. அக்கட்சி தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 50வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதனையொட்டி அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை நடப்பாண்டு முழுவதும் அக்கட்சியின் தலைமை கொண்டாடி வருகின்றனர்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சி அலுவலகத்தில் குவிந்த ஏரளமான தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நமது அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள பொன்விழா சிறப்பு மலரை இருவரும் வெளியிட்டனர்.



    இதையடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருக்கும் ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: