• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக பொன்விழா : எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக கொடியேற்றினார் சசிகலா

அதிமுக பொன்விழா : எம்ஜிஆர் நினைவில்லத்தில் அதிமுக கொடியேற்றினார் சசிகலா

சசிகலா

சசிகலா

அதிமுக பொன்விழாவையொட்டி எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் சசிகலா அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

  • Share this:
    அதிமுக தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு பொன்விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டையொட்டி சென்னை பாண்டிபஜாரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த சசிகலா அதிமுக கொடியேற்றினார். இதையடுத்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தார்.

    அதன்பிறகு ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அதிமுக பொன்விழா மலரை வெளியிடுகிறார். பின்னர் அங்குள்ள காது மற்றும் வாய் பேச முடியாத பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறி, அவர்களுடன் சசிகலா மதிய உணவு உட்கொள்கிறார்.



    இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கட்டடம் முழுவதும் பச்சை மற்றும் வெள்ளை நிற மின்விளக்குகளால் ஒளிருகிறது. அலுவலக வாயில் முன்பு பிரம்மாண்ட வாழை மரங்கள் கட்டுப்பட்டு. பொம்மை யானைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: