ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்வாரா எடப்பாடி பழனிசாமி..? அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை

இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்வாரா எடப்பாடி பழனிசாமி..? அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு வழக்கு

அதிமுக பொதுக்குழு வழக்கு

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையும் படிக்க :  ''உதயநிதியும் அவரது தாயும் தான் முதலமைச்சர்கள்''- செல்லூர் ராஜு விமர்சனம்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளது என்றும், அதனால் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில், அதிமுகவை பொறுத்தவரையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில், தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க முடியாது எனவும், பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

First published:

Tags: ADMK, Admk Party, AIADMK, Edappadi Palaniswami, O Pannerselvam