ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு.. ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு.. ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை, அடுத்த மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதன் வழக்கு விசாரணையில், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 2023 Holidays: தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்!

தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளின் விசாரணையை 2023, ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 2 வார கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 4ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: ADMK, OPS - EPS, Supreme court