Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழு: வானகரத்தில் இறுதிக்கட்ட ஏற்பாடு.. பேனர்களில் ஓபிஎஸ் படம் தவிர்ப்பு

அதிமுக பொதுக்குழு: வானகரத்தில் இறுதிக்கட்ட ஏற்பாடு.. பேனர்களில் ஓபிஎஸ் படம் தவிர்ப்பு

அ.தி.மு.க அலுவலகம்

அ.தி.மு.க அலுவலகம்

AIADMK GCM: பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழு நாளை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வானகரத்தில் அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதி கட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

    இந்தப் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், இந்தப் பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விசா முறைகேடு வழக்கு... அடுத்தடுத்த சி.பி.ஐ சோதனை வளையத்துக்குள் எம்.பி கார்த்தி சிதம்பரம்..

    கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்களும் பதாகைகளில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில்,  நாளைய அதிமுக பொதுக்குழுவிற்கான வரவேற்பு பேனர்கள் மற்றும் பதாகைகளில் ஒரு இடத்தில் கூட ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இடம்பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: AIADMK, Edappadi palanisamy, O Panneerselvam, OPS - EPS

    அடுத்த செய்தி