அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று காலை தொடங்கியது.
இதில், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.
பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை ஆகியவற்றை வைத்திருந்த உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தில் சுமார் 2,665 பேர் கலந்து கொள்வார்கள் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஒற்றை தலைமை குறித்த விவகாரம் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இடையே கடந்த சில நாட்களாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இருவரும் ஒன்றாக இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். முன்னதாக வீட்டில் இருந்து புறப்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் மலர் தூவியும் வாழ்த்து கோஷங்கள் எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோல், ஓ.பன்னீர்செல்வம் காரில் வருவதற்கு பதிலாக பிரச்சார வாகனத்தில் பொதுக்குழுவுக்கு வருகை தந்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலுக்கு ஓபிஎஸ் வருகை தந்தபோது, ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் உறுப்பினர்கள் தரப்பில் எழுப்பப்பட்டது. மேலும், ஓபிஎஸை முன்னாள் அமைச்சர்கள் யாரும் வரவேற்கவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மேடையில் ஏறிய சிறிது நேரத்திலேயே தொண்டர்கள் எதிர்ப்பு காரணமாக கீழே இறங்கினார். ஓபிஎஸை வெளியேற கோரி கேஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.