முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம்... அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பேச்சு

அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம்... அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பேச்சு

சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம்

கூட்டம் தொடங்கியது முதலே பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 

  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக மேடையில் ஆவேசமாக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

கூட்டம் தொடங்கியது முதலே பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.

அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், திடீரேன எழுந்து மைக் அருகே சென்று, அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக கோஷம் எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: ADMK, CV Shanmugam, OPS - EPS