Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு.. ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு.. ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஈபிஎஸ் மேல்முறையீடு செய்தார். அதேநேரம், தங்களின் கருத்துக்களை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது

    சென்னையில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுக-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், நடந்தவற்றை மறந்துவிட்டு, கட்சியின் முன்னேற்றத்துக்காக எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.  ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் அழைப்பை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, ஒபிஎஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

    இதையும் படிங்க: தூத்துக்குடி விசாரணை ஆணைய அறிக்கையை அரசே கசியவிட்டதா? - முதல்வர் ராஜினாமா செய்ய ஜெயக்குமார் வலியுறுத்தல்

    மேலும், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்தார். அதேநேரம், தங்களின் கருத்துக்களை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று காலை விசாரணைக்கு வருகிறது. விசாரணையின் போது, இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்கின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: AIADMK, Chennai High court, Edappadi palanisamy, OPS - EPS

    அடுத்த செய்தி