ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை வருகிற 30ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விசாரணையில், தீர்ப்பிற்கு தடை விதிக்க கூடாது என்றும், முடிவு எட்டப்படும் வரை பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

  இதையடுத்து விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் சுதான்சு தூலியா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

  Also Read : ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல்

  அப்போது, வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் கோரிக்கை வைத்தார்.  அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது.

  இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ வாதங்களையும், கூடுதல் ஆவணங்களையும் தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள்,  வழக்கு விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: ADMK, Supreme court