அதிமுக பொதுக்குழு 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு கேட்டு அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
அப்போது, காவல்துறை தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பொதுக்குழுவின் கால அட்டவணை வேண்டும். வழக்கை நாளை தள்ளிவைக்க வேண்டும். பொதுக்குழு தொடர்பாக ஏதும் பிரச்சினை என தெரிந்தால் ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம் காவல்துறையை நாடலாம் என்பது உள்ளிட்ட 26 கேள்விகளை கேட்டிருந்தோம். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து இன்றும் பதில் வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், பெஞ்சமின் மனுவுக்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே அதிகாரம் உள்ளதால், பாதுகாப்பு கோரியும் அவர்கள் மனுத்தாக்கல் செய்ய முடியும்.
ஆனால், ஒரு அழைப்பாளராக கலந்து கொள்ள இருக்கும் மூன்றாவது நபர் தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதனால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், யாரோ பிரச்சனை செய்வார்கள், கலவரம் நடக்கும் என்றெல்லாம் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெஞ்சமின் பொதுக்குழு உறுப்பினர் இல்லையா என்று கேள்வி எழுப்பினார், அதற்கு விளக்கம் அளித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், பெஞ்சமின் பொதுக்குழு உறுப்பினர்தான் ஆனால் அவரால், பாதுகாப்பு கோரி வழக்கு தொடர முடியாது என்றும், பொதுக்குழு கூட்டுவதில் உள்ள பிரச்சினை குறித்து காவல்துறையை அணுகுவோம் என்றும் வாதிடப்பட்டது.
இந்நிலையில், பெஞ்சமின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், அதிமுக கூட்டத்திற்கு 2,600 பேர் வரை வருவார்கள் என்றும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும், அனைத்து வாகனங்களுக்கும் பாஸ் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ. யாராக இருந்தாலும் உரிமை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பெஞ்சமின் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், எந்த தரப்பு என்றெல்லாம் காவல்துறை பார்க்க கூடாது என்றும் அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதிமுக பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு நிதிபதி உத்தரவிட்டார்.
Must Read : அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரி... திறமை மிக்கவர் வரவேண்டும் - நயினார் நாகேந்திரன்
மேலும், அதிமுக பொதுக்குழு பாதுகாப்பு தொடர்பான காவல்துறையின் கேள்விகளுக்கு அதிமுக இன்று மதியம் 1 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Court Case, EPS, OPS