ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுக பொதுக்குழுவால் வானகரத்தில் பொதுமக்கள் அச்சம்... காவல்நிலையத்தில் குவியும் புகார்

அதிமுக பொதுக்குழுவால் வானகரத்தில் பொதுமக்கள் அச்சம்... காவல்நிலையத்தில் குவியும் புகார்

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

சென்னை வானகரத்தில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என காவல் நிலையத்தில் பொதுமக்கள் தொடர் புகாரை அளித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது. அதிமுக பொதுக்குழு தற்போது நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்று ஓபிஎஸ் தரப்பில் என்று தெரவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்னை நடக்கும் அளவிற்கு ஏதும் நடக்காது என்றும் திட்டமிட்டப்படி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் தரப்பில் தெரவிக்கப்பட்டது.

  இதனிடையே அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை என்று கூறி வழக்கை தள்ளி வைத்தது.

  இதையடுத்து வானகரத்தில் நாளை அதிமுக பொதுக் குழு நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை காரணமாக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பட செய்யப்பட்டுள்ளது. சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மண்டபத்தில் முன் கூடுவதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

  1972க்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய எழுச்சி- வளர்மதி கருத்து

  இதனால் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் காவல்நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். பொதுக்குழு என்ற பெயரில் குண்டர்கள் குடியிருப்பு பகுதியில் கொடூர ஆயுதங்களோடு சுற்றி திரிவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்து வருகின்றனர்.

  உச்ச நீதிமன்ற தீர்ப்பை சற்றும் மதிக்காமல் அதிமுகவினர் ஏராளமான டிஜிட்டல் பேனர்களை நடைபாதையில் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்கத்தினர் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரில் அதிமுகவினர் வைத்துள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக பிளக்ஸ் பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: ADMK, OPS - EPS