அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார் - செய்தியாளர் சந்திப்பில் நடந்த சுவாரஸ்யம்

அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார் - செய்தியாளர் சந்திப்பில் நடந்த சுவாரஸ்யம்
அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார்
  • Share this:
அதிமுக முன்னாள் எம்பியும் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளருமாக இருந்தவர் லட்சுமணன். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகத்தை கடந்த 2012ல் அமைச்சர் பதவியிலிருந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். அப்போது அவரிடமிருந்த விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியில் லட்சுமணனை ஜெயலலிதா நியமித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து லட்சுமணன் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் இணைப்புக்குப் பிறகு சி.வி.சண்முகம் மாவட்டச் செயலாளராகவும், லட்சுமணன் அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு மாவட்ட அளவில் ஓரங்கப்பட்ட லட்சுமணன், கடலூரைப் போல விழுப்புரம் மாவட்டத்தையும் பிரித்து தன்னை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கட்சித் தலைமை ஒப்புக்கொள்ளாததால் அதிருப்தியடைந்த லட்சுமணன் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகியே இருந்த நிலையில், தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இவருடன் சேர்ந்த 14 ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிகழ்வின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விழுப்புரம் திமுக மாவட்டச் செயலாளர் பொன்முடி உடன் இருந்தனர்.


Also read: ஒரு டெலிவரிக்கு 36 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக குறைப்பு - அண்ணா அறிவாலயத்தில் மனு அளித்த ஸ்விக்கி ஊழியர்கள்

திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லக்ஷ்மணன்; தமிழகத்தில் வலுவான அரசு வலிமையான தலைமையின் கீழ் அமைய வேண்டும் என்பதால் திமுகவில் இணைந்து உள்ளேன். மேலும், கொரானா காலகட்டத்தில் யார் முதலமைச்சர் என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கக் கூடிய அதிமுக ஆட்சியை விட மக்களுக்கு கொரானா காலத்திலும்  உதவி புரிந்து மக்களின் கண்ணீரைத் துடைத்து வரும் திமுக கட்சியில்  இணைந்து உள்ளேன்.

அதிமுக அரசு பாஜகவின்  கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். காட்டாற்று வெள்ளம் போல் நடைபெற்று வரும் இந்த ஆட்சியில் நாங்கள் தத்தளிக்க விரும்பவில்லை. எனவேதான் திமுகவில் இணைந்துள்ளேன் என்று லட்சுமணன் தெரிவித்தார்.பேட்டியின் போது, “வரும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியாரை (ச்சை...)  ...ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக பாடுபடுவோம்” என்று லட்சுமணன் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
First published: August 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading