• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை!

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை!

இந்திரகுமாரி

இந்திரகுமாரி

சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தார்.

  • Share this:
    ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரின் கணவர் பாபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 1991 – 1996 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில்
    தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அந்த சமயத்தில், அவருடைய கணவர் பாபு நடத்தி வந்த அறக்கட்டளை மூலமாக மெர்சி மதர் இந்தியா என்ற அறக்கட்டளை, பரணி சுவாதி கல்வி அறக்கட்டளை சார்பில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாக கூறி சமூக நலத்துறை சார்பில் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று சமூக நலத்துறையின் அப்போதைய செயலாளர் லட்சுமி பிரானேஷ் கடந்த 1997 ஆம் ஆண்டு அளித்த புகாரின் பேரில், சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு, இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கட கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்த்தில் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

    இந்த வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.  இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலிசியா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்தார்.

    இதையும் படிங்க: ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    இதில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரின் கணவர் பாபுவிற்கும் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்குவதாகவும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிருபாகரன் இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட நீதிபதி, வெங்கடகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

    மேலும் படிக்க: குப்பை கிடங்காக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி!


    தீர்ப்பு வெளியானதும் அதிர்ச்சியடைந்த இந்திரகுமாரிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: