சசிகலா காரில் பறக்கும் அதிமுக கொடி - டிடிவி தினகரன் அதிரடி விளக்கம்

சசிகலா காரில் பறக்கும் அதிமுக கொடி - டிடிவி தினகரன் அதிரடி விளக்கம்

சசிகலா

சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர். எனவே அதிமுக கொடியை பயன்படுத்தும் அத்தனை அதிகாரமும் சசிகலாவிற்கு உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

  இதையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் இருந்து தேவனஹள்ளியில் உள்ள PRESTIGE GOLFSHIRE விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என தமிழக முதல்வர் உட்பட அமைச்சர்கள் பலரும் தெரிவித்து வரும் நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருந்தது பல கேள்விகளை எழுப்பியது.

  உடனே இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதிமுகவை உரிமை கொண்டாட முடியாது என்றார்.

  இந்நிலையில் அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சசிகலா காரில் அதிமுக கொடி இடம்பெற்றது குறித்து கூறுகையில், “சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர். அதிமுக கொடியை பயன்படுத்தும் அத்தனை அதிகாரமும் சசிகலாவிற்கு உள்ளது. செயற்குழு பொதுக்குழு கூட்டும் அதிகாரம் சசிகலாவிற்குதான் உள்ளது. அவர் பயன்படுத்திய கார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார்.

  7 நாள் ஓய்விற்கு பிறகு சென்னை திரும்புவார். அமமுக தொடங்கியது அதிமுகவை மீட்டெடுக்கத்தான். அதிமுக-வை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடரும். சசிகலா தமிழகம் வந்த பின்னர் அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டம் தொடரும்” என்றார்.
  Published by:Sheik Hanifah
  First published: