அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் வரும் மாதம் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முடிவுக்குப் பிறகு அ.தி.மு.கவை விரைவில் மீட்ட்டுப்பேன் என்று
சசிகலா தொடர்ந்து கூறிவருகிறார். அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று தொண்டர்களையும் சந்தித்துவருகிறார்.
சசிகலாவை அ.தி.மு.கவில் இணைக்க வேண்டும் என்ற குரல்களும் அவ்வப்போது எழுந்துவருகின்றன. இதற்கிடையில், பா.ஜ.கவின் செயல்பாடு குறித்து அ.தி.மு.க மூத்த தலைவர் பொன்னையன் பேசிய பேச்சுகள் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய பரபரப்பான சூழலில் அ.தி.மு.க கூட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழக கூட்ட அரங்கில் இன்று தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக கூட்டத்தில் செல்போனுக்கு தடை: பங்கேற்காமல் வெளியேறிய மைத்ரேயன்
இந்தக் கூட்டத்தில் 23-6-2022 அன்று நடைபெற உள்ள கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்தும், என்னென்ன தீர்மானங்களைக் கொண்டுவரலாம் என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.