Home /News /tamil-nadu /

பரபரப்பான சூழலில் சென்னையில் இன்று அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம்

பரபரப்பான சூழலில் சென்னையில் இன்று அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க அலுவலகம்

அ.தி.மு.க அலுவலகம்

ADMK : சென்னையில் இன்று அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டம் செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிமுக தலைமைக்கழம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022 திங்கட் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் - எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்ட மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பெயர்கள் இல்லாமல், தலைமை நிலைய செயலாளர் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்ட திட்ட விதி 20ஏ-வின்படி, ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது என்றும், அதன்படி இருவரின் ஒப்புதலை பெற்றுத்தான் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் இருவரின் ஒப்புதலின்றி கழக தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் விதிக்கு எதிராக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தாம் எந்தவிதமான ஒப்புதலையும் கூட்டத்துக்கு அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    Must Read : தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.. மீறினால் அபராதம்.. தமிழக அரசு அறிவிப்பு

    சட்டத்துக்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள இக்கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால், அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும், தொண்டர்களையும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    அடுத்த செய்தி