Home /News /tamil-nadu /

சசிகலா, தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும்: ஓ.பி.எஸ்ஸிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்- அதிமுகவில் மீண்டும் சலசலப்பு

சசிகலா, தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும்: ஓ.பி.எஸ்ஸிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்- அதிமுகவில் மீண்டும் சலசலப்பு

சசிகலா, டி.டி.வி.தினகரன்

சசிகலா, டி.டி.வி.தினகரன்

சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.கவில் இணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் இன்று மாலை அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.கவினர், சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்துள்ளது. அ.தி.மு.க தோல்விக்கு கட்சி பிளவு தான் காரணம் என்று பொதுமக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரவலான பேச்சு அடிபட்டது. அதற்கு பிளவுபட்ட அ.தி.மு.கவை ஒருங்கிணைக்க வேண்டும். சசிகலா மற்றும் டி.டி.விதினகரன் ஆகியோர்களை கட்சியில் சேர்த்து அ.ம.மு.கவை அ.தி.மு.கவுடன் இணைத்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் என்று ஓ.பன்னீர் செல்வத்திடம் தொண்டர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    "என் உயிரிலும் மேலான தலைவரப்பா" மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தகத்தின் சுவாரஸ்யங்கள்

    மேலும் வருகின்ற 5ஆம் தேதி தேனி மாவட்ட அளவில் உள்ள கட்சி நிர்வாகிகளின் ஒருங்கிணைத்த ஊழியர் கூட்டத்தை கூட்டி அந்த கூட்டத்தில் அ.ம.மு.கவை அ.தி.மு.கவுடன் ஒருங்கிணைப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK, Sasikala

    அடுத்த செய்தி