பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்

அஇஅதிமுக அலுவலகம்

பாலியல் புகாரில் சிக்கி போக்சோ வழக்கில் கைதான அ.தி.மு.க., பிரமுகர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவிலைச் சேர்ந்தவர் வேல்முருகன்,38. இவர் தனது மகளுடன் படிக்கும் பத்தாவது படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

  இது தொடர்பாக அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு களங்கும் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் வேல்முருகன் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

  Also Read : தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்கிறது!

  அதிமுக நிர்வாகி வேல்முருகன் அவருடைய மகளின் தோழிக்கு அவர் மகள் அனுப்புவதை போல தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் குறுந்கவல்கள் அனுப்பி வந்துள்ளார். அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு அந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற வேல்முருகன் அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது மாணவியின் பாட்டி வீட்டிற்கு வர அவர் வெளியே சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து   மாணவிக்கு வேல்முருகன் தொடர்ந்து  மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.

  பாலியல் புகாரில் சிக்கியவர்


  கடந்த வாரம் வேல்முருகன் மாணவியின்  வீட்டிற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து  சென்றுள்ளார். அங்கிருந்தவாறு   தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் வேல்முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: