அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது: முதல்வர் வேட்பாளர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா?

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது: முதல்வர் வேட்பாளர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா?

அதிமுக

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஆட்சியைப் பிடிக்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துவந்தனர். அது பூதாகரமாக வெடிக்க கடந்த மாதம் 15-ம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்களுக்கு மாறி மாறி சென்று பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள், பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தனர். பின்னர், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்து கூற அதிமுக நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

  முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய இ.பி.எஸ். தரப்பு மும்முரம் காட்டும் நிலையில், இரு அணிகள் ஒன்றிணைந்தபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதியான 11 பேர் கொண்டு வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு விரும்புகிறது. இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு இடையே அதிமுக செயற்குழு கூடுகிறது.

  300-க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கொரோனா தடுப்பு அம்சங்களுடன் அதிமுக தலைமையகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த வெள்ளியன்று கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த இபிஎஸ், ஓபிஎஸ், அன்றே தீர்மானங்களை இறுதி செய்ததாக தெரிகிறது.

  3-வது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குதல், தேர்தலில் எவ்வாறு களம் காண வேண்டும் என்பது தொடர்பாக தொண்டர்களுக்கு அறிவுரை, கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக கையாண்ட அதிமுக அரசுக்கு பாராட்டு உள்பட 15 முதல் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  செயற்குழு கூடுவது வழக்கமான நடைமுறை என அமைச்சர் ஜெயக்குமாரும், என்ன முடிவு எடுத்தாலும் தேர்தல் வெற்றியே குறிக்கோள் என அமைச்சர் செல்லூர் ராஜூவும், தற்போது கருத்து கூற முடியாது என கடம்பூர் ராஜூவும் தெரிவித்துள்ளனர்.

  அதிமுக முதலமைச்சர் வேட்பாளர், சசிகலா விவகாரம் ஆகியவை 300 பேர் இருக்கக்கூடிய செயற்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்பில்லை என மூத்த பத்திரிகையாளர் டி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க... வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் அழைப்பு  இருப்பினும், செயற்குழு கூட்டத்தில் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்குமா என்ற கேள்வியே, அதிமுக தொண்டர்களிடையே பிரதானமாக உள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: