• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொடூர கொலை; 4 பேர் கைது

அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொடூர கொலை; 4 பேர் கைது

அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொடூர கொலை

அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொடூர கொலை

சென்னையில் அதிமுக பிரமுகர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் 4 பேர் கடலுாரில் சரணடைந்துள்ளனர். 

  • Share this:
    கொலை சென்னை மயிலாப்பூர் அப்பு தெருவில் ரியல் எஸ்டேட் அதிபரும், அ.தி.மு.க பிரமுகருமான கோபி (எ) உருளை கோபி 4 பேர் கொண்ட கும்பலால் செவ்வாய் இரவு தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட உருளை கோபி கடந்த சில மாதங்களுக்கு முன் அசோக் நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி சிவகுமாரின் கூட்டாளி ஆவார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் அருகே ரவுடி மணி படுகொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்கவே இந்த கொலை நடந்ததாக தெரியவந்தது. மணியைக் கொன்ற கொலையாளிகளுக்கு கோபி உதவியதாகத் தெரியவந்ததால் அவரைத் தீர்த்துக் கட்ட, மணியின் தாய் பாரதி திட்டமிட்டுள்ளார்

    அதன்படி, மணியின் கூட்டாளியான கிழங்கு சரவணன் உள்ளிட்டோர் உதவியுடன் கோபியைக் கொலை செய்துள்ளார் என்கின்றனர் போலீசார். இதில் அபிராமபுரத்தை சேர்ந்த கிழங்கு சரவணன், மயிலாப்பூர் அப்பு தெருவை சேர்ந்த கலைவாணன், மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர்.



    இந்த நிலையில், சரவணன், கலையரசன், சுரேஷ், பார்த்திபன் ஆகிய 4 பேர், வியாழக்கிழமை அன்று கடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் கடலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கடலூர் போலீசார் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    Also Read : பல கோடி மோசடியில் ஈடுபட்ட டிக் டாக் புகழ் தம்பதி கைது!

    மயிலாப்பூர் போலீசார் இந்த நான்கு பேரையும் மயிலாப்பூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணையின் முடிவில்தான் இந்தக் கொலையின் பின்னால் யார் யார் உள்ளனர் என்பது முழுமையாகத் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: