ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

போலீஸ் என்று சொல்லி பிச்சைக்காரரை பிரம்பால் அடித்துத் துவைத்த அதிமுக நிர்வாகி!

போலீஸ் என்று சொல்லி பிச்சைக்காரரை பிரம்பால் அடித்துத் துவைத்த அதிமுக நிர்வாகி!

பிச்சைக்காரரை சரமாரியாக அடிக்கும் அதிமுக நிர்வாகி

பிச்சைக்காரரை சரமாரியாக அடிக்கும் அதிமுக நிர்வாகி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

போலீஸ் என கூறி சாலையில் படுத்து உறங்கிய பிச்சைக்காரரை சரமாரியாக அடித்த அதிமுக நிர்வாகி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒருவர், தான் திருப்போரூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் என்று கூறி பேருந்து நிலையத்துக்குள் வந்து கையில் வைத்திருந்த லத்தியால் உறங்கிக் கொண்டிருந்த பிச்சைக்காரரை கண்மூடித்தனமாக தாக்கினார்.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தடுத்தும் கேட்காமல் அந்த நபர் பிச்சைக்காரரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பிச்சைக்காரரை சாலை ஓரத்தில் இழுத்து போட்டுவிட்டு அந்த நபர் சென்றுவிட்டார்.

அதன்பின்னர் அங்கிருந்த மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து பிச்சைக்காரரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ பரவிய நிலையில், இதுகுறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது பிச்சைகாரரை அடித்தவர் காவல்துறையை சேர்ந்தவர் இல்லை. அவர் அதிமுக பிரமுகர் குமார் என்பது தெரியவந்தது.

First published:

Tags: ADMK member, Begger, Thirupporur