முகப்பு /செய்தி /தமிழ்நாடு / என் பொண்ணு அடுத்து எப்போ வர போறீங்கனு கேட்குறா - ரெய்டை நினைத்து சிரித்த விஜயபாஸ்கர்.!!

என் பொண்ணு அடுத்து எப்போ வர போறீங்கனு கேட்குறா - ரெய்டை நினைத்து சிரித்த விஜயபாஸ்கர்.!!

சி. விஜயபாஸ்கர்

சி. விஜயபாஸ்கர்

VijayaBhaskar | இது மாதிரியான சோதனை நடைப்பெறும் பொழுது அதனை எதிர்கொள்ளும் நல்ல மனவலிமையை புரட்சி தலைவி அம்மா அவர்கள் கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள்-விஜயபாஸ்கர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம் ஆகிய 13 இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை அடையாறில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 16.37 லட்சம் , 1,872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோ  வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 - ஐ போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் இவ்வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இது மாதிரியான சோதனை நடைப்பெறும் பொழுது அதனை எதிர்கொள்ளும் நல்ல மனவலிமையை புரட்சி தலைவி அம்மா அவர்கள் கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள் என்று கூறினார். தனிபட்ட நபரின் மீது கொண்ட காட்டத்தால் அரசியல் கால்புணர்ச்சியின் உட்சக்கட்ட பிரதிபலிப்பாக இந்த சோதனையை கருதுவதாகவும் பல்வேறு பணிகள் இருக்கக்கூடிய ஒரு அரசு மூன்று அறையையும் ஒரு ஹாலையும் சோதனை செய்ய இவ்வளவு அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது கவலையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் எனது மகள் அடுத்து எப்போ வரப்போறீங்க சார் எனக் கேட்டார். அந்த அளவு அனைத்தயும் எதிர்க்கொள்ள தயாராக இருப்பாதாகவும் தெரிவித்தார்.

Read More : ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே பாஜக ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது: கே.எஸ்.அழகிரி

சி.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது, ஊத்துக்கோட்டை, மஞ்சக்கரணை என்ற பகுதியில்  மருத்துவமனையே கட்டப்படாத நிலையில், வேல்ஸ் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 250 படுக்கை வசதிகளுடன் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு மருத்துவமனை தகுதியானது எனவும் சான்றிதழ் வழங்கியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவாகரம் தொடர்பாகவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: ADMK, IT Raid, Minister Vijayabaskar