ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நான் போராட வரவில்லை என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தேன் -  முன்னாள் அமைச்சர்  வளர்மதி

நான் போராட வரவில்லை என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தேன் -  முன்னாள் அமைச்சர்  வளர்மதி

வளர்மதி

வளர்மதி

வளர்மதி வருவதற்கு முன்னதாக வழக்கறிஞர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் நடந்த சோதனையின் போது முன்னாள் அமைச்சர் வளர்மதி அங்கே வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடையவராக கருதப்படும் KCP நிறுவன இயக்குநர் சந்திரபிரகாஷின் கோடம்பாக்கம்  ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நேற்று சுமார்  11 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறையின் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான 6 லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆவணங்களை சோதனையிட்டனர்.

Also Read:  எஸ்.பி.வேலுமணி வீட்டில் விறுவிறு ரெய்டு.. நெருக்கமானவருக்கு நெஞ்சுவலி

சென்னை , கோவை மாநகரில் பொதுப்பணித்துறையின் கட்டுமானம் சார்ந்த பணிகளில் கே.சி.பி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்திய நிலையில் துணை ஆய்வாளர்  தலைமையிலான 10 காவலர்கள் கோடம்பாக்கத்தில் உள்ள கே.சி.பி நிறுவன அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Also Read; அமைச்சரா இருந்த 34பேர் வீட்டிலுமா ரெய்டு நடக்குது.. புகார் வந்ததால் ரெய்டு நடக்குது- அமைச்சர் கீதாஜீவன்

கே.சி.பி infra limited நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டை ஆனந்தன் சாலையில் உள்ள  கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகிறது. இதே அலுவலகத்தில் நமது அம்மா நாளிதழ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி இந்த அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வளர்மதி வருவதற்கு முன்னதாக வழக்கறிஞர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் முறையான சான்றுகள் இல்லாமல் சோதனை செய்ய வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர். அதற்கு பிறகு வந்த வளர்மதி அங்கே போராட்டத்தில் ஈடுபட போகிறார்கள் என்று நினைத்து போலீசார் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.

ஆனால் போலீசாரிடம் சென்று நாங்கள் போராட வரவில்லை என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தேன் என வளர்மதி கூறிவிட்டு சென்றார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, Ex Minister Valarmathi, SP Velumani, Tamilnadu