ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராஜேந்திர பாலாஜிக்கு நீண்ட நாள் ஜாமின் வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

ராஜேந்திர பாலாஜிக்கு நீண்ட நாள் ஜாமின் வழங்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டில், நீண்ட நாள் ஜாமின் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

  இதுதொடர்பான விசாரணையின் போது, இரு முறை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ராஜேந்திர பாலாஜி குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளதால், அவருக்கு ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்க கூடாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: சத்தியம்தான் முக்கியம்.. பிறழ்சாட்சி சுவாதிக்கு நீதிமன்றம் அறிவுரை

  அத்துடன், இந்த வழக்கில் 45 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

  இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி குற்றச்சாட்டு மிக கடுமையானது என குறிப்பிட்ட நீதிபதிகள், அவர் முக்கிய குற்றவாளியாக உள்ளதால் நீண்ட நாள் ஜாமின் வழங்க முடியாது என்றும் தெரிவித்தனர். அத்துடன், -தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Rajendra balaji, Supreme court