Home /News /tamil-nadu /

பாஜகவின் வளர்ச்சி அதிமுகவுக்கு பாதிப்பு..எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பொன்னையன்

பாஜகவின் வளர்ச்சி அதிமுகவுக்கு பாதிப்பு..எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பொன்னையன்

பொன்னையன்

பொன்னையன்

C. ponnaiyan: நதிகள் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் இதனை அதிமுக அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி. பொன்னையன் தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் வளர்ச்சி அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்  பாஜக உடன் கூட்டணி என்பது வேறு- அதிமுகவின் கொள்கை என்பது வேறு என்றும் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளார்.

    அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன், `பாஜகவினர் `அதிமுக பின்னுக்கு தள்ளப்படும்’ என்ற பிரச்சாரத்தை மறைமுகமாக செய்து வருகிறார்கள். அதன்மூலம் வளர்ச்சியடைய நினைக்கின்ற்னர். இதனால் அதிமுகவினர் எச்சரிக்கையாவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தமிழக பாஜக நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும் என்று பேசியிருந்தார்.

    தனது கருத்து தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர்,  சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களை அதிமுக கொண்டுள்ளது. ஆனால், எந்த அடிப்படையில் தமிழகத்தில் திமுகவுக்கு பிரதான எதிர்க்கட்சி பாஜக என்று போடுகிறார்கள், யார் தூண்டுதலில் போடுகிறார்கள் என்பது குறித்து கேள்வி எழுகிறது.  எனவே, இது குறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்காணிக்க வேண்டும்.

    உண்மை நிலையை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். நதி விவகாரத்தில் பாஜகவின் நிலை என்பது நாடறிந்த ஒன்று. காவிரி விவகாரத்தில் தமிழகம் எதிர்த்தது, மாணவர்கள் எதிர்த்தனர், அனைத்து கட்சியினரும் எதிர்த்தனர். ஆனால், பாஜக, காங்கிரஸ் மட்டும் எதிர்க்கவில்லை. நீட் கொள்கையில் நாங்கள் எப்படி பாஜகவுடன் ஒத்துபோக முடியும். அவர்கள் கொள்கை வேறு, எங்கள் கொள்கை வேறு.

    இதை படிக்க: பா.ஜ.கவில் சசிகலா; நயினார் நாகேந்திரன் கருத்தை மறுக்கும் அண்ணாமலை


    அதேபோல், மொழிக்கொள்கை; இருமொழி கொள்கைதான் தமிழகத்திற்கு வேண்டும். இதுதான் எங்கள் கொள்கை. அதை மீறி பாஜக செயல்படும்போது கொள்கை ரீதியில் ஒத்துபோக முடியாது. தங்கள் கொள்கையை மாற்றிக்கொள்ளாதவரை தமிழகத்தில் பாஜக வளர முடியாது என்று தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, BJP, Ponnaiyan

    அடுத்த செய்தி