ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்திற்கு 100 மத்திய அமைச்சர்கள் கூட வரட்டும்.. மாநில உரிமையில் தலையிட்டால் எதிர்ப்போம் - ஜெயக்குமார்

தமிழகத்திற்கு 100 மத்திய அமைச்சர்கள் கூட வரட்டும்.. மாநில உரிமையில் தலையிட்டால் எதிர்ப்போம் - ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டை பின்பற்றி வருகிறோம் , மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால் அதை அதிமுக கண்டிப்பாக எதிர்க்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாட்டுக்கு 100 மத்திய அமைச்சர்கள் கூட வரட்டும் , ஆனால் அவர்களால் தமிழகத்துக்கு நல்லது நடந்தால் சரி, அரசு உரிமைகளில் தலையிட்டால் கண்டிப்பாக எதிர்ப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அதிமுக கொடியேற்றிய அவர், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிரிந்து கொண்டார்.தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் நல்லாசியோடு ஜெயலலிதா நல்லாசியோடு அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை நிறைவு செய்து இன்று 51வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக எழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைமை கழகத்திலும் மிகச் சிறப்பாக எழுச்சியாக அனைத்து தொண்டர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் வரவேற்புடன் மிகச் சிறப்பாக துவக்க விழா ஆண்டை கொண்டாடினோம் நன்றி என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்து மதத்தினரை அவமதித்துவிட்டதற்கான முகாந்திரம் இல்லை... ஆ.ராசா மீதான வழக்கு தள்ளுபடி

அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு, அதிமுக அலுவலகத்தின் வெளியே ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்குவது தொடர்பாக பல முறை கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் முடிவு எடுக்க வேண்டும். அந்த வகையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்டுள்ள அதிமுகவின் கடிதத்திற்கு மதிப்பளித்து எங்களுக்கு மரியாதையும் ,உரிமையும் நிலை நாட்டிய வேண்டியதுதான் சபாநாயகர் உடைய கடமை என கூறினார்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் அதிமுக பங்கேற்குமா என்ற கேள்விக்கு, நாளை சபாநாயகர் எடுக்கும் முடிவை பொறுத்து கட்சி தலைமை முடிவு செய்யும் என கூறினார். மேலும் ஓபிஎஸ் தரப்பில் 4பேர் மட்டும் தான் எனவும் இபிஎஸ் தரப்பில் தான் அதிக அளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் எனவும் இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் தரப்பு என்று ஊடகங்கள் போடாதீர்கள் என்றும் கேட்டுகொண்டார்.

இதையும் படிங்க: ஜனநாயக கடமையாற்றவே பேரவைக்கு வந்தோம் - ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அரசு துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டை பின்பற்றி வருகிறோம் , மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால் அதை அதிமுக கண்டிப்பாக எதிர்க்கும் எனவும் 100 மத்திய அமைச்சர்கள் கூட தமிழகத்திற்கு வரட்டும் , ஆனால் அவர்களால் தமிழகத்துக்கு நல்லது நடந்தால் சரி உரிமைகளில் தலையிட்டால் கண்டிப்பாக எதிர்ப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

Published by:Arunkumar A
First published:

Tags: ADMK, Jayakumar